ஒருநாள் ஒருவன் தன்னுடைய கிறிஸ்துவ சகோதரனை நோக்கி, உங்க கிறிஸ்துவத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஏனென்றால் இந்தியா அதிக மதங்களின் இல்லமாகவும், மிகுந்த மதநம்பிக்கை கொண்ட நாடாகவும் விளங்குகிறது. அப்படியிருக்க ஏன் நீங்கள் இன்னும் ஒரு மதத்தை அறிமுகப்படுத்தி, குழப்பத்தை அதிகரிக்கிறீர்கள். நிச்சயமாக இந்தியாவிலே போதுமான மதங்கள் இருக்கின்றன.

கிறிஸ்தவ நண்பன் அதற்கு பதிலாக, நண்பனே ; நான் மதத்திலே ஆர்வமுடையவன் அல்ல. ஆனால் புதிதும் ஜீவனுமான மார்கத்தை எடுத்து சொல்லும் சுவிக்ஷேத்திலே ஆழ்ந்த அக்கறையுடையவன். நான் மதத்திற்காக தெருக்களில் செல்ல விரும்பவில்லை. ஆனால் சுவிக்ஷேத்தின் நிமித்தம் உலகம் முழுவதும் செல்ல விரும்புகிறேன். இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.

மதம் : மனிதன் உருவாக்கினது. சுவிக்ஷேசம் : கடவுள் கொடுத்தது.

மதம் : கடவுளுக்காக மனிதன் என்ன செய்கிறான், என்ன செய்ய வேண்டும் என்பது.

சுவிக்ஷேசம் : மனிதனுக்காக கடவுள் என்ன செய்திருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது.

மதம் :கடவுளை மனிதன் எப்படி தேட வேண்டும் என்பதை பற்றினது.
சுவிக்ஷேசம் : மனிதனை கடவுள் எப்படி தேடி வந்தார் என்பதை பற்றினது.

மதம் : ஒரு நல்ல பார்வை. சுவிக்ஷேசம் : ஒரு நற்செய்தி.

மதம் : ஒரு நல்ல அறிவுரை. சுவிக்ஷேசம் : ஒரு மகத்தான அறிவிப்பு.

மதம் : ஒரு மனிதனை எடுத்து அப்படியே விட்டுவிடுகிறது. சுவிக்ஷேசம்: ஒரு மனிதன் எடுத்து, அவன் எப்படியாய் இருக்கவேண்டுமோ அப்படியாய் உருவாக்குவது.

மதம் : புறம்பான நிலையிலே மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சுவிக்ஷேசம் : உள்ளான நிலையிலே மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

மதம் : பெரும்பாலும் பரவசமாயிருக்கிறது. சுவிக்ஷேசம் : ஒரு படையாய் இருந்து, இயேசுகிறிஸ்துவை நம்புகிற ஒவ்வொருவரையும் இரட்சிக்கிற , விடுதலையாக்குகிற, பாவமன்னிப்பை தருகிற, ஆரோக்கியத்தை தருகிற, ஆசீர்வாதத்தை தருகிற, சமாதானத்தை தந்து இரட்சிக்கிற தேவனுடைய வல்லமையாயிருக்கிறது.

அநேக மதங்கள் உண்டு, ஆனால் சுவிக்ஷேசம் ஒன்றே ஒன்றுதான்.