அநேகர் கர்த்தரை எப்படி நேசிக்கலாம் என்று வகைத்தேடுகின்றார்கள். சிலர் அதை கண்டுபிடித்து, செயல்படுத்தி, திருப்தியடையாமல் சோர்ந்து போய்விடுகின்றார்கள். 
பிரியமானவர்களே…. 
முதலாவது அவர் உங்களை எவ்வளவு அதிகமாய் நேசிக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்; அறிந்து கொள்ளுங்கள்; அதன் பிறகு அவரை அன்புகூருகிற விஷயத்தில் மாத்திரமல்ல, உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் ஒருபோதும் தோற்றுபோகமாட்டீர்கள்.
கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து, அறிவுகெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாயிருங்கள். அந்த அன்பு உங்களுடைய இருதயங்களில் உற்றப்பட்டு இருக்கிறபடியால் அந்த நம்பிக்கை உங்களை வெட்கப்படுத்தாது.

எபேசியர் – 3: 18,19 ரோமர் – 5 : 5