மனிதனின் கேள்வி.
தேவனின் பதில்.
💟💟💟💟💟💟💟💟

👳🏻மனிதன்:
என்னை நேசிப்பார் யாருமில்லையே?

📕தேவன்:
எரேமி 31:3-
அநாதி சிநேகத்தால் நான்உன்னை சிநேகித்தேன்.

👳🏻மனிதன்:
எனக்கு பயமாக உள்ளதே?

📕தேவன்:
2 தீமோ 1:7
பயமுள்ள ஆவியைக் நான் உனக்கு கொடுக்கவில்லை.

👳🏻மனிதன்:
என்ன செய்வதென்றே தெரியவில்லையே?

📕தேவன்:
பிலி 4:13
உன்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எதையும் செய்ய உன்னால் முடியும்.

👳🏻மனிதன்:
கவலைகளால் சோர்ந்து போனேன் என்ன செய்வது?

📕தேவன்:
1 பேது 5:7-
நான் உன்னை விசாரிக்கிறவரானபடியால் நீ உன் கவலைகளை என்மேல் வைத்துவிடலாம்.

👳🏻மனிதன்:
ஆபத்தில்
எனக்கு உதவுபவர்கள் யார்?

📕தேவன்:
சங் 50:15 –
ஆபத்துக் காலத்தில் (இயேசுவாகிய) என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன்.

👳🏻மனிதன்:
இது என்னால் கூடாதது.

📕தேவன்:
லூக் 18:27- மனுஷரால் கூடாதவைகள்தான்
ஆனால்
தேவனாகிய என்னால் எல்லாம் கூடும்.

👼🏻மனிதன்:
நான் சோர்ந்து போயிருக்கிறேனே?

📕தேவன்:
மத் 11:28- நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்.

👳🏻மனிதன்:
வாழ்க்கையில் என்னால் முன்னேறவே முடியவில்லையே?

📕தேவன்:
2 கொரி 12:9 –
என் கிருபை உனக்குப் போதும் என்று கர்த்தராகிய நான் கூறுகிறேன்.

👳🏻மனிதன்:
என் தேவைகளை என்னால நிறைவு செய்யமுடியவில்லையே?

📕தேவன்:
பிலி 4:19 –
உன் தேவனாகிய நான் என்னுடைய ஐசுவரியத்தின்படி உன் குறைவையெல்லாம் மகிமையிலே நிறைவாக்குவேன்.

👳🏻மனிதன்:
நான் ஒரு அனாதையைப்போல் வாழ்கிறேனே?

📕தேவன்:
சங் 27:10 –
உன் தகப்பனும்,உன் தாயும் உன்னைக் கைவிட்டாலும் கர்த்தராகிய நான் உன்னைச் சேர்த்துக் கொள்ளுவேன்.

👳🏻மனிதன்:
நான் மதியற்றவன் என்று பிறர் ஏளனம் செய்கிறார்களே?

📕தேவன்:
நீதி 15:20.
ஞானமுள்ள தகப்பனுடைய பிள்ளையப் போல உன்னை மாற்றுகிறேன்.

👳🏻மனிதன்:
நான் ஒரு பாவி எனக்கு மன்னிப்பு கிடைக்குமா?

📕தேவன்:
1யோவான் 1:9
பாவங்களை உனக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி உன்னை சுத்திகரிப்பதர்க்கு நான் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறேன்.

👳🏻 மனிதன்:
மரண பயம் என்னைக் கலங்கப்பண்ணுகிறதே?

📕தேவன்:
யோவான் 11:25
நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். இயேசுவாகிய என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.
<><><><><><><><><>
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁ஆமென்.