சிங்கத்தின் இரைக்காக மட்டுமே மான்கள் படைக்கப்பட்டிருந்தால் அதற்கு வேகமாக ஓடும் கால்களை தேவன் தந்திருக்கமாட்டார். பிரச்சனை, துன்பம், போராட்டம் இவைகளுக்காக மட்டுமே நீங்கள் படைக்கப்பட்டிருந்தால் தேவன் உங்களுக்கு இரட்சிப்பை தந்திருக்கமாட்டார். எழும்பி முன்னேறி செல்லுங்கள். தப்பிக்கொள்ளும்படியான போக்கை தேவன் உண்டாக்குவார். இஸ்ரவேலே (தேவ பிள்ளையே) நீ பாக்கியவான். கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே உனக்கு ஓப்பானவன் யார் ?